www.dialforbooks.in

Posted: February 9, 2012 in அறிவிப்பு

Our new website is www.dialforbooks.in. Pl follow us at our new site.

எங்கள் புதிய வலைத்தளமான www.dialforbooks.inக்கு உங்களை வரவேற்கிறோம்.

Rs 200.00

நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்

ஆசிரியர்: ஜெயமோகன்

ஜெயமோகன் எழுதியுள்ள இந்த இலக்கிய அறிமுக நூல், ஓர் எளிய ஆரம்ப வாசகரை மனத்தில் கொண்டு அவருக்கு நவீனத் தமிழிலக்கியத்தை அறிமுகம் செய்ய முற்படுகிறது. இந்நூல் இலக்கிய வாசகர்களுக்கும் மாணவர்களுக்கும் உதவக்கூடியது.

இந்நூலின் முதல் பகுதி, எளிய வாசகன் ஒருவனுக்கு இலக்கிய அறிமுகம் உருவாகும்போது ஏற்படும் ஐயங்-களைப்பற்றிப் பேசுகிறது. விளக்கங்களை அளிக்கிறது. ஒரு நூலை எப்படி வாசிப்பது என்று கற்பிக்கிறது. இரண்டாம் பகுதி, நவீனத் தமிழிலக்கிய வரலாறை அறிமுகப்-படுத்துகிறது.

மூன்றாம் பகுதி, நவீனத் தமிழிலக்கியத்தை வாசிப்பதற்கான விரிவான பரிந்துரைகள் அடங்கியது. சிறந்த நாவல்கள், சிறந்த சிறுகதைகள், சிறந்த கவிதைகள், சிறந்த கட்டுரை நூல்கள் ஆகியவற்றைப் பட்டியல் இடுகிறது.

நான்காம் பகுதி, இலக்கிய இயக்கங்களையும் இலக்கியக் கொள்கை-களையும் சுருக்கமாக அறிமுகம் செய்கிறது.

ஐந்தாம் பகுதியில், இலக்கிய வாசிப்புக்கு உதவக்கூடிய 200 இலக்கியக் கலைச் சொற்கள் விளக்கத்துடன் அளிக்கப்-பட்டுள்ளன.

Dial For Books – 94459 01234 | 9445 97 97 97

ஆன்லைனில் ஆர்டர் செய்ய: https://www.nhm.in/shop/978-81-8493-689-6.html

Rs 80.00

புதிய கிரிக்கெட்டின் மாறும் நிறங்கள்

ஆசிரியர்: ஆர். அபிலாஷ்

நமது நாட்டில் கிரிக்கெட்டைப்போல பிரபலமான பிரிதொரு துறையைக் காண்பது மிகவும் கடினம். எனினும் தமிழில் கிரிக்கெட் பற்றிய ஆழமான பார்வைகளைக் கொண்ட எழுத்துக்கள் மிகவும் குறைவு. இதை நிவர்த்திக்கும் முகமாக அமைந்திருக்கிறது ஆர்.அபிலாஷின் இந்தக் கட்டுரைத் தொகுப்பு. இந்திய மற்றும் சர்வதேச சமகால கிரிக்கெட் சூழல் குறித்தும், அதன் முக்கியமான மாற்றங்கள் மற்றும் நிகழ்வுகள் குறித்தும் மிகத் தீவிரமான பரிசோதனைகளை நுட்பமான மொழியில் எழுதிச் செல்கிறார் அபிலாஷ். இவரது எழுத்துக்களில் வெளிப்படும் கூர்மையான அவதானிப்பும், நுட்பமான அங்கதமும் கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமல்ல, எல்லோரையும் விரும்பி படிக்கத் தூண்டும் வகையில் இந்நூல் அமைந்திருக்கிறது.

Dial For Books – 94459 01234 | 9445 97 97 97

ஆன்லைனில் ஆர்டர் செய்ய: https://www.nhm.in/shop/100-00-0000-190-1.html

சீனா: கம்யூனிஸ்ட் முதலாளி

Rs.125.00

சீனா: கம்யூனிஸ்ட் முதலாளி

ஆசிரியர்: பிரேம் ஷங்கர் ஜா

சீன எழுத்துகளைப் புரிந்து கொள்வதைக் காட்டிலும் கடினமானது இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வது…

கடந்த 30 ஆண்டுகளில் சீனாவின் வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 10 சதவிகிதத்துக்கும் அதிகமாகவே இருந்திருக்கிறது. உலகில் இவ்வளவு அதிக வளர்ச்சியை இத்தனை ஆண்டுகள் தொடர்ந்து சாதித்த நாடு எதுவுமே கிடையாது. ஆனால், அந்தச் சாதனையை அது ஜனநாயக வழியில் சாதிக்கவில்லை.

சீனாவில் நிலங்கள் அரசுக்கு மட்டுமே சொந்தம். ஆயிரம் ஏக்கர் விவசாய நிலத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலம் உருவாக்க அரசாங்கம் நினைத்தால், விவசாயிகள் போட்டது போட்டபடி புறப்பட்டுப் போய்விட வேண்டியதுதான்.

‘காய்’ என்றால் சீன மொழியில் ‘கடல்’ என்று பொருள். ஷாங்காய் நகரில் கடல் உண்டு. ஆனால் கடற்கரை, மணலும் சேறுமாக இருக்கும். ஷாங்காய் நகரின் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சென் லியாங்கு ஓர் உத்தரவு போட்டார். ஓரிரு மாதங்களிலேயே 1,28,000 டன் வெண் மணலைப் புறநகரில் இருந்து அள்ளிக் கொண்டுவந்து கொட்டி அழகான கடற்கரையை உருவாகிவிட்டார்கள். கடலே இல்லாமல் இருந்தாலும் அதைக் கூடக் கொண்டு வந்திருப்பார்! சீனாவில் ஆட்சியில் இருப்பவர்களுக்கு அவ்வளவு அதிகாரம்.

அபரிமிதமான வளர்ச்சி… ஆனால், அதன் பொருளாதாரம் அரசுக் கட்டுப்பாட்டில் இருந்து திறந்த சந்தையை நோக்கிய நகர்வில் நடுவழியில் நிற்கிறது. அரசியல் சுதந்தரம் அடியோடு கிடையாது. இந்த நிலை நீண்ட நாள் நீடிக்க முடியுமா? அதுமட்டுமல்லாமல், சீனா அடைந்ததாகச் சொல்லும் வளர்ச்சி உண்மையானதுதானா? கருத்துச் சுதந்தரம் இல்லாமல் மக்கள் நிம்மதியாக வாழ்கிறார்களா?

சீனா பற்றிய உண்மையான மதிப்பீட்டை ஆதாரபூர்வமாக, அழுத்தமாக, தெளிவாக இந்த நூல் முன்வைக்கிறது.

Dial For Books – 94459 01234 | 9445 97 97 97

ஆன்லைனில் ஆர்டர் செய்ய: https://www.nhm.in/shop/978-81-8493-646-9.html

வெளியீடு: சந்தியா பதிப்பகம்
பக்கங்கள்: 272
முதல் பதிப்பு: 2010
விலை: Rs. 150/-

நாம்
பட்டம் பழிவாங்குகிறார்
தமிழர்-அல்லாதார்
நேரு விலகுவதானால்…?
ஆவடி காங்கிரஸ் ஆலோசிக்கட்டும்
சித்தூர் தமிழரின் சிந்தனைக்கு
நேருவின் சோஷலிஸம்
தெற்கெல்லைப் போராட்டம்
வயிறு தமிழகத்துக்கு, வாய் மலையாளத்துக்கு!
இலங்கைத் தமிழரின் அல்லல்
காமராசர் கைவித்துவிட்டார்

உள்ளிட்ட பல கட்டுரைகள் இடம்பெற்றுள்ளது. சோம.லெ., ரா.பி.சேதுப்பிள்ளை, குயிலன், அபயன், கு.ரா, மு.வ, நாமக்கல் கவிஞர் உள்ளிட்ட பலர் எழுதிய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

Dail For Books: 94459 01234 | 9445 97 97 97

ஆன்லைனில் ஆர்டர் செய்ய: https://www.nhm.in/shop/100-00-0000-166-3.html

Malcolm X
Rs.100

மால்கம் எக்ஸின் வரலாற்றை எழுதுவது என்பது மனித குல விடுதலைக்கான நாயகர்களில் ஒருவரின் வரலாற்றை எழுதுவது என்பதே. கறுப்பின மக்களின் விடுதலைக்காக போராட்டம், ஆன்மீகம் என்ற இரண்டு பாதையிலும் அவர் மேற்கொண்ட பயணம் உலகெங்கும் அடையாள அரசியலுக்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கிறது. தனது வாழ்வையும் உயிரையும் மால்கம் எக்ஸ் எந்த இலட்சியத்திற்காக அர்ப்பணித்தாரோ அவை இன்றும் தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் ஒவ்வொரு மக்கள் சமூகத்தின் கனவிலும் உயிர்த்தெழுந்து கொண்டிருக்கிறது. மால்கம் எக்ஸ் என்ற அந்த விடுதலைக் கனவைக் கண்முன் கொண்டு வருகிறது ரவிக்குமாரின் இந்த நூல்.

வெளியீடு: உயிர்மை பதிப்பகம்
ஆசிரியர்: ரவிக்குமார்

Dial For Books: 94459 10234 | 9445 97 97 97

Rs.350/-

இந்நாவலில் நாயகர்கள்/நாயகிகள்/வில்லன்கள் என எவருமில்லை. அந்த விதத்தில் மிகவும் ஜனநாயகப் பண்பு கொண்டதாக இருக்கிறது இந்தப் பிரதி. இதன் காரணமாக அதிகாரத்துக்கு எதிரானதொரு அமைப்பைக் கொண்டதாக இந்தப் பிரதி விளங்குகிறது. பின் நவீனத்துவப் பிரதியொன்றில் காணக்கிடைக்கும் சாதகமான இந்தப் பண்புகள் மிக இயல்பாக இந்த யதார்த்தவகைப் பிரதியில் விரவிக்கிடக்கின்றன.

ஒரே நேரத்தில் மானுடவியல் ஆவணமாக, வரலாற்றுப் பதிவாக, படைப்புக் குணம் நிரம்பிய புனைவாக விளங்குகிற இந்தப் பிரதி இதுவரை பூடகப்படுத்தப்பட்டிருந்த பெண்கள் மற்றும் முஸ்லீம்களின் உலகுக்குள் நம்மை இட்டுச் செல்கிறது. அறியாமை ஏற்படுத்திய இடைவெளியைக் கற்பிதங்களால் நிரப்பிக் கொண்டிருந்த நாம் இந்தப் பிரதியின் ஒளியில் சுயபரிசோதனை செய்துகொள்கிறோம்.

முன்னுரையில் ரவிக்குமார்.

Dial For Books – 94459 01234 | 9445 97 97 97

விலை: 225 ரூ, கிழக்கு பதிப்பகம்

‘பிரிவோம்… சந்திப்போம்’ ஆனந்த விகடனில் தொடராக வெளியானது. முதல் பாகம் முடிந்ததும் உடனடியாக அடுத்த பாகத்தைத் தொடங்காமல் சில மாதங்கள் இடைவெளி விட்டு இதை சுஜாதா எழுதி முடித்தார். வாழ்க்கையில் எதையுமே அதிதீவிரமாக எதிர்கொள்ளும் இளைஞன் ரகுபதி, அலட்சியமான நடத்தைகொண்ட அமெரிக்க இந்திய இளைஞன் ராதா கிஷன், மனத்தில் குழந்தைத்தனம் மாறாத தேவதைப் பெண் மதுமிதா, தீர்க்கமான அமெரிக்க தமிழ்ப்பெண் ரத்னா என்கிற நான்கு கதாபாத்திரங்களுடன் இயங்கும் இந்தக் காதல் கதை திருநெல்வேலி பாபநாசத்தில் தொடங்கி அமெரிக்காவில் நிறைவடைகிறது. இரு பாகங்களும் சேர்ந்து ஒரு புத்தகமாக முதல் முறையாக வெளியாகிறது.

Dial For Books:  94459 01234   |   9445 97 97 97

பாகம் 1 – விலை: 140/-


பாகம்2 – விலை: 125/-

வெளியீடு: சந்தியா பதிப்பகம்

Dial For Books: 94459 01234 | 9445 97 97 97